ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்க எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் கூட்டுப் பேரணி!

Saturday, September 24th, 2016

எழுக தமிழ் எழுச்சிக் கூட்டுப் பேரணியில் உணர்வெழுச்சியுடன் கலந்தகொள்ளும் வகையில் வடபகுதி  மக்கள் நாலாபுறத்திலிருந்தும் அலைகடலென திரண்டு வருகின்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உன்னத நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் எழுச்சிக் கூட்டுப் பேரணி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் எழுச்சிக் கூட்டுப் பேரணி யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் பேரணி யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.

பேரணியின் நிறைவில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. இவ் எழுக தமிழ் எழுச்சி பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளும் முகமாக வடபகுதியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர்.

9

5

6

4

3

2

1

Related posts: