ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

Saturday, February 23rd, 2019

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வினை முன்னிறுத்தியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் குறித்த தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணைப் பொறிமுறையினையும், உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தநிலையில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறுவதனால், அதனை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த மாணவர் ஒன்றியம் மேலும் கோரியுள்ளது.

Related posts: