எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்டம்!

நாட்டில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவுக்கான பணி இடம்பெற்றுவருவதாக சட்டம் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கும், நாட்டின் எல்லை பாதுகாப்பிற்குமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும். எனவே, இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக, விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
|
|