எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு அலி சப்ரி கோரிக்கை!

Wednesday, November 17th, 2021

எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கை மத்திய வங்கியும் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலைச் சூத்திரமொன்றை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

உலகலாவிய ரீதியில் எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு ஏற்ற இறக்கமான எரிபொருள் விலைகளைக் கொண்டிருக்கும் முறைக்கு அரசாங்கம் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த கோரிக்கையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் சப்ரி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: