எரிபொருள் விலை உயர்வு – புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை என போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ற வசதியான சேவையை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்குமாறு பொறியியலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பயணிகளின் அதிகரிப்புக்கு ஏற்ப வசதிகளையும் மேம்படுத்துவது அவசியம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: