எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

புத்தாண்டுக் காலத்துக்கு எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாகவும் மேலும் விண்ணப்பம் செய்யப்பட்ட கப்பல்கள் வந்துகொண்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!
உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!
வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்க ஜப்பானிடமிருந்து 46 மில்லியன் டொலர் மானியம் - நிதி அமைச்சின் செயலாளர்...
|
|