எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை – அல்ஜெசீராவை சாடும் சுமதிபால!

Monday, October 8th, 2018

இலங்கை அணியின் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களோ ஆதாரங்களோ சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கோ இலங்கை கிரிக்கெட்டுக்கோ கிடைக்கவில்லை.

அல் ஜசீரா தொலைக்காட்சி போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு நாடு மீது சேறு பூசியது. அதேபோன்று தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது..” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: