எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிப்பு!

Wednesday, September 27th, 2017

எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா வௌிநாட்டிற்கு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியவுடன் குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிடப் படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் கணக்காய்வு திருத்த சட்ட மூலம் தொடர்பில் அவர் ஆராய்ந்து பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தொடர்பில் மீள் திருத்தங்கள் தேவை எனவும் அவற்றை திருத்தி இணைக்குமாறும் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: