எதிர்வரும் யாழில் 22 தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு!  

Tuesday, July 17th, 2018

யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நீண்டகாலமாக குறித்த தொண்டராசிரியர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் எதிர்வரும் 22 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடராக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகள் கவனத்திற்கொள்ளப்படும் என்றும் இதன் அடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: