எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிமுதல் ரஷ்யாவின் ‘எரோஃப்ளொட்’ நிறுவனத்தினால் இலங்கைக்கு நேரடி விமான சேவைகள்!

Saturday, September 4th, 2021

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட் (Aeroflot) எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

ரஷ்யாவின் எரோஃப்ளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் நேற்றுமுதல் இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக தீர்மானம் பிற்போட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: