எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, October 29th, 2021

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் இன்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: