எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் – புதிய கிரிக்கெட் யாப்பு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

Monday, March 15th, 2021

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர், புதிய கிரிக்கெட் யாப்பை தயாரிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில், ஆட்சேபனைகள் இருக்குமாயின், அவற்றை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குறித்த ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி ஆகியோர் உள்ளிட்ட 12 பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட 19 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: