எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Monday, December 21st, 2020

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான சகல பாடசாலைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முன்பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்குட்பட்ட தரம் 6 முதல் தரம் 13 வரையான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதிமுதல் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை நாளை மறுதினம்  23 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. குறித்த தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து இன்னும் தீர்மானம் எவையும் எட்டப்படவில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: