எதிர்கால நல்கருதி நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்- நிதி அமைச்சர்!

Saturday, September 10th, 2016

எதிர்காலத்தில் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிதி அமைச்சர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கா வண்ணம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட தயாரிப்பிற்கு சமாந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களிப்பு என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் நாட்டை பின்நோக்கி நகர்த்தும் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றாது.நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது சவால்களை எதிர்நோக்க நேரிடுவது வழமையானது ஒன்றேயாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது பிரபல்யம் அடையாத தீர்மானங்களை எடுக்க நான் தயங்கப் போவதில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முனைப்புக்களுக்கு புத்திஜீவிகளின் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.நாட்டின் பொருளாதார நிலைமை கிரமமான முறையில் வலுப்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ravi_2

Related posts: