ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் – மக்களிடம் யாழ் ஆயர் வேண்டுகோள்!

Monday, April 20th, 2020

யாழ். மாவடத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டது என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார் –

குறித்த ஊடக அறிக்கையில் அவர’; மேலும் குறிப்பிட்டதாவது –

கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக சூழமைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொணரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தொற்றினால் பெரிதும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகும். இறைவனின் இரக்கத்தால் நாம் இதுவரை பெரிதும் பாதிக்கப்படவில்லை. அதற்கான காரணம் மக்களாகிய நீங்கள் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கீழ்ப்படிந்து வாழ்ந்தமையே ஆகும்.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரசு மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தியுள்ள நிலையில், மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் செறிவாக கூடிவருவதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாவட்டச் செலயகம், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கை அவசரமாக தளர்த்த வேண்டாம் எனக் கோரிய போதிலும் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

ஆகவே கோவிட் 19 இன் அச்சுறுத்தல் இன்னும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்டு என்பதே உண்மைநிலையாகும். எனவே ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் யாழ் மக்களாகிய எமக்கு வேண்டாம். எதிர்வரும் இரு வாரங்களுக்காவது தொடர்ந்து விழிப்பாக இருப்போம் என அவர்  தெரிவித்துள்ளார்

Related posts: