உலக வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

Thursday, November 4th, 2021

இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: