உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம்!

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்தரப்படுத்தலை Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.
162 நாடுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்காவுக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது.
அதிக செழிப்பு, அரசியல் மற்றும் சுதந்திரம் என்பவற்றை முதல்நிலைப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இப்பட்டியலில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் என்பன முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.
இதேவேளை நியூசிலாந்து, சுவிஸ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீனவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை!
பரீட்சை இலகுபடுத்தலை ஆராயக் குழு நியமனம் - பரீட்சைத் திணைக்களம்!
இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சு ஏற்பாடு - நிதியமைச்சின...
|
|