உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை மட்டக்களப்பில் உள்ள அவரது பங்களாவில் விசேட சந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால் விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக பிரகடனப்படுத்த முடியும் என அவர் எதிர் பார்ப்பதாகவும் உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்ததுடன்.

இலங்கையின் கடன் மறுசீர்ரமைப்பினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சகல வசதிகளையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: