உறுதிமிக்க தலைமைத்துவமே மாற்றத்தை நோக்கிய வல்லமையை தரும் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022

அரசியல் செயற்பாடுகளில் சோர்ந்திருத்தல், தருணங்களை உணராமல் தாமதித்திருந்தல் என்பன பின்னடைவுகளையே தரும். மாறாக இடைவெளியின்றி எடுக்கும் நிதானமான முடிவுகளே மாற்றத்தை நோக்கியதாக இருக்கும்.

சமகால அரசியல் தலைவர்களுள் அத்தகைய உறுதிமிக்க முடிவுகளை எடுக்க முடிந்த ஒரு தலைமைத்துவ ஆளுமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கட்சியின் வட்டார உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

90 களில் நாம் தீவக மண்ணிலும் அதன் பின் யாழிலும் கால் பதித்த வேளைகளிலும், அதன்பின்னர் ஒவ்வொரு ஆட்சி மாற்றங்கள் நடந்தபோதிலும் ஈ.பி.டி.பியின் கதை முடிந்தது என பலர் பலவாறு எக்காளமிட்டபோதிலும்சரி, இன்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் ஆட்சி அமைந்தபோதும் சரி அரசியல் தொலைதூர துணிச்சலோடு முடிவுகளை எடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதுமட்டுமன்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் முன்னுதாணமாக திகழ்ந்தவரும் அவரே.

இவ்வாறான உறுதிமிக்க முடிவுகளே ஒட்டுமொத்த இலங்கை தீவுக்கு மட்டுமன்றி தமிழர் தாயக பிரதேசங்களிலும் மாற்றங்களை உருவாகும் வல்லமை கொண்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: