உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான்!

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரம்புட்டான் உட்கொள்ளும் போது அதன் தோல்களை பலரும் வீதியில் வீசிவிட்டு செல்வதனை பழக்கமாக்கி கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டிஜிற்றல் மயப்படுத்தப்படுகின்றது பரீட்சைகள் திணைக்களம் !
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் - உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை –...
உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை - புடின் தகவல்!
|
|