உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Monday, January 16th, 2017

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

நூற்றுக்கு 3.5 வீதமான மாணவ மாணவியர் உயர்தரப் பரீட்சையில் இம்முறை மூன்று ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர். உயர்தரப் பரீட்சையில் 134238 பாடசாலை பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும் இது 63.36 வீதம் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் 457 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கணித பிரிவில் 603 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் வர்த்தகப் பிரிவில் 3835 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கலைப் பிரிவில் 1557 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

exam-626x380

Related posts: