உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Tuesday, October 3rd, 20232023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த ஆண்டுக்கான (2023) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|