உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை!

Wednesday, December 27th, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கான உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 28 ஆம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்தி, வாக்குரிமை அட்டை விநியோகம் இடம்பெறும் எனவும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு பின்னர் வாக்களர் வாக்குரிமை அட்டைகள் அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படாத அதேவேளை, வாக்குரிமை அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை மேலும் கோரியுள்ளது.

Related posts: