உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா – கிழக்கு மக்கள் பெருமிதம்!  

Thursday, August 3rd, 2017

மக்களின் உணர்வகளுக்கும் அபிலாஷைகளுக்கம் மதிப்பளித்த அவற்ற்றுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதில் இற்றைவரையில் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழ் அரசியல் வாதியாக டக்ளஸ் தேவானந்தா மட்டுமே திகழ்கின்றார் என திருகோணமலையில் இலகு வீட்டுத்திட்டத்தை கோரி பேரணியில் கலந்துகொண்டிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

“ஓலைக் குடிசையிலும்,தகரக் கொட்டகைகளிலும், தரப்பாள் நிழலிலும் தஞ்சமடைந்திருக்கும் எங்களுக்கு இலகு வீடுகளை துரிதமாக வழங்கவேண்டும் எனக்கோரிக்கை முன்வைத்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை – மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்துகொண்டிருந்த மக்கள் “ஓலைக் குடிசையிலும், தகரக் கொட்டகைகளிலும், தரப்பாள் நிழலிலும் தஞ்சமடைந்திருக்கும் எங்களுக்கு இலகுவீடுகள் மறுவாழ்வாக அமையும். தடைபோடும் கூட்டமைப்பேஎங்கள் நிலையைகண் திறந்துபாருங்கள்.

இலகுவீட்டோடு,மின்சாரவசதி,சமையலறை உபகரணம், தனியானகழிவறை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இத்தனையும் கிடைக்குமே உனக்கேன் பொறுக்குதில்லை.

கொழும்பிலும், வெளிநாடுகளிலும் உங்கள் குடும்பங்கள் சுகமாக வாழ்கின்றார்கள். நாங்கள் எல்லாமும் இழந்து நாதியற்று நிற்கின்றோம்” அகிய சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

திருகோணமலை உள்த்துறை வீதி பகுதியில் இன்று முற்பகல் ஆரம்பமான குறித்த பேரணி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றது.  இதன்போது ஜனாதிபதிக்கான மனுவை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவிடம் கையளித்தனர்.

ஜனாதிபதிக்கான மனுவை ஆளுனரிடம் கையளித்த மக்கள் நீண்டகாலமாக தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஆதரித்து வந்தபோதும் அர்கள் தமது தேவைப்பாடுகளுக்கோ அன்றி கோரிக்கைகளுக்கோ இற்றைவரை உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது தமது சுகபோக வாழ்விலேயே குறியாக உள்ளனர். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களின் உணர்வுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மகங்கொடுத்து மக்களின் தேவைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அயராது உழைத்தவருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினர்.

Related posts: