உடைந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது!

Sunday, May 21st, 2017

வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தார். எனினும் இன்று பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: