உச்ச நீதிமன்றில் திடீர் தீ!

Wednesday, October 4th, 2017

உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நீதிமன்ற செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வந்த போது, திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவியதைத் தொடர்ந்து, நீதிமன்ற பணிகள் யாவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகளின் உத்தியோகபூர்வ அறையிலேயே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts: