ஈஸ்டர் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் ஆணையை பெற்ற தயாராக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றத்தில் ஆணையை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மீண்டும் மரபணு பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் சாரா ஜஸ்மின் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 170 பேர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 45 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 13 பேர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 6 பேரு்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல் நடத்திய சஹ்ரான் உட்பட கொலையாளிகளை அடிப்படைவாத கொள்கையை நோக்கி கொண்டு சென்றவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலி என்ற நபர்.

இவரே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைகளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் எனவும் கமல் குணரத்ன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: