இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் அவதானத்துடன் உள்ளது – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, October 8th, 2023

இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகம் அவதானத்துடன் உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அங்குள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் புலம்பெயர்ந்த பணியாளர்களை பாதுகாப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீன – ஹமாஸ் ஆயுத தாரிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: