இவ்வாண்டில் பொலிஸாருக்கு எதிராக 1,474 முறைப்பாடுகள் பதிவு!

Wednesday, October 19th, 2016

நாட்டில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் இதுவரை 1474 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவற்றுள் 608 முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாசகூரே தெரிவித்தள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 24 பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பொலிஸாரின் பதவி உயர்வு மற்றும் அவர்களது உத்தியோகபூர்வ பிரச்சினைகள் தொடர்பாக 3247 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவற்றில் 505 முறைப்பாடுகளுக்கு ஆணைக்குழு தீர்வை வழங்கியுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார். தற்போது நாட்டில் 86,000 பேர் பொலிஸ் சேவையில் உள்ளதாகவும் அவர்களுள் 11,000 பேர் பெண்கள் எனவும் தெரிவித்த அவர் வினைத்திறனான, ஒழுக்கமுள்ள பொலிஸ் சேவையை நல்லாட்சி அரசில் ஏற்படுத்துவதே பொலிஸ் ஆணைக்குழுவின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

827710614Police-2

Related posts: