இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Tuesday, June 5th, 2018

இழப்புகள் அனைத்தும் அர்த்தமுள்ளவகையில் அரசியலாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

பொன்.சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் மற்றும் விடுதலை வித்துக்கள் தினமும் ஒருங்கே கடைப்பிடிக்கப்பட்ட இன்றையதினத்தில் உரையபற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  –

2004 ஆம் ஆண்டு விடுதலை வித்துக்கள் தினத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரகடனப்படுத்தியதிலிருந்து நாம் ஆண்டுதோறும் இத்தினத்தை கடைப்பிடித்து வருகின்றோம்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக பொன் சிவகுமாரன் அவர்கள் இருக்கின்றார் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. 1968 ஆம் ஆண்டு சமபந்திப் போசனம் நடத்தியதனூடாக சமூக மட்டத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியவர் பொன்சிவகுமாரன் என்றால் அது மிகையாகாது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மட்டுமன்றி ஏனைய சக ஈழ விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளையும் போரில் உயிர் நீத்த பொது மக்களையும் பொதுவான தினமொன்றில் நினைவு கூரவேண்டும் என வலியுறுத்தி வருபவர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

அந்தவகையில்தான் ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் உயிரிழந்தவர்களின் இழப்புகள் அனைத்தும் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின்  நிலைப்பாடாகும்

இந்த விடுதலை வித்துக்கள் தினம் வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் எதிர்வரும் காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.

சாதியத்திற்கு எதிராக சாவு மணியடித்தவர் பொன் சிவகுமாரன் என்பதுடன் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழராட்சி மாநாட்டின் இறுதி நாளில் மக்கள் கொல்லப்பட்ட சம்பவமானது சிவகுமாரனை கிளந்ததெழச் செய்த முக்கியமான சம்பவம் என்றும் பசுபதி சீவரத்தினம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது விடுதலை வித்துக்கள் தின செய்தியையும் பசுபதி சீவரத்தினம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0054 11

12 4 7 5 3

Related posts: