இலத்திரனியல் ஊடகங்களுக்கு சுயாதீன ஒளிபரப்பு அதிகார சபை!

இலத்திரனியல் ஊடகங்களுக்காக சுயாதீன ஒளிபரப்பு அதிகாரசபையொன்றை அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்களினால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைய அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலத்திரனியல் ஊடகங்களுக்கு மட்டும் அமுல்படுத்தப்படும் வகையில் இந்த சுயாதீன ஒளிபரப்பு அதிகாரசபை செயற்பட உள்ளது.பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கும் இந்த புதிய அதிகார சபைக்கும் இடையில் வேறுபாடு உண்டு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிகார சபையினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அமுல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் சட்டரீதியாக கடப்பாடுடையவர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது.பிரிட்டனில் காணப்படும் சுயாதீன அதிகாசரபைக்கு நிகரான வகையில் இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களுக்காக இந்த ஆணைக்குழு நிறுவப்பட உள்ளது.
அரசாங்கத்தின் எவ்வித தலையீடும் இன்றி சுயாதீன அடிப்படையில் அதிகாரசபையினால் இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்தும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
|
|