இலங்கை பொலிஸ் சீருடையில் மாற்றம்!

Wednesday, February 1st, 2017

இலங்கை பொலிஸ் பிரிவினரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் ஆய்வு  நடத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் சீருடையில் மாற்றம் செய்யப்பட முடியுமா? என ஆராயப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் பிரிவின் நன்மதிப்பை உயர்த்தும் வகையிலும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் குறித்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகத்திடமும் கருத்துக் கணிப்பு பெறப்பட உள்ளது.

இதில் சீருடை மாற்றம் குறித்த படிவத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

------------------10

Related posts: