இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்ளது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022

இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை கற்றுக்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை நெருக்கடி குறித்து இயல்பாகவே கவலைப்படுவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை பந்து இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கைகளில் உள்ளது, அவர்கள் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கை தேவை அதன்போது எவ்வாறான ஆதரவை வகிக்க முடியும் என்பதை இந்தியா ஆராயும் என்று ஜெய்சங்கர் கூட்டத்துக்கு பின்னர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கை மிகவும்  பலவீனமான நிலையில்’ இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையைப் போன்றதொரு நிலைமை இந்தியாவில் உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இலங்கை விடயத்தில் நிதி விவேகத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த முயற்சித்தோம். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று ஜெய்சங்கர்  கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இது இரண்டும் போதுமான அளவு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இது மிகவும் நெருங்கிய அண்டை வீட்டாருடன் தொடர்புடைய ஒரு விஷயம் மற்றும் அருகாமையில் இருப்பதால் அதன் விளைவுகள் இந்தியாவுக்கும் ஏற்படும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடதுசாரிக் கட்சிகள் திமுக உள்ளிட்ட 28 இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவில் இதுபோன்ற சூழல் ஏற்படுவது குறித்த அச்சங்களை  நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: