இலங்கை தொடர்பான வெளிப்புற தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டது சீனா – சீன பிரதிநிதி ஜெனீவாவில் தெரிவிப்பு!

இலங்கையின் உள்ளக முரண்பாட்டுக்கு வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதாக ஜெனிவாவில் சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது, சீன பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது
அதேபோல இலங்கையின் உள்ளக விடயங்களுக்கு வெளிப்புற தலையீடுகளால் இடையூறு விளைவிப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இத்தாலியிலிருந்து தொலைகாணொளி வழியாக நேற்றையதினம் கலந்துகொண்டு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|