இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியானது!

Friday, April 19th, 2024

இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024) வெளியாகி உள்ளன.

இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations – Sri Lanka)  இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.

பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தகுதியான 440 பேர் நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: