இலங்கையில் – எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!

பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரு மாதங்களில் நடைமுறைக்கு வருகின்றது இலத்திரனியல் அடையாள அட்டை?
மதவாதத்தையும் ஏற்படுத்த எந்தவொரு நபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது - பிரதமர்
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு - அரியாலை, பூம்புகாரில் பயணித்த ...
|
|