இலங்கையில் உற்பத்தியாகிறது மின்சார முச்சக்கர வாகனம்!

Thursday, July 26th, 2018

2020ஆம் ஆண்டளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என மின்சார முச்சக்கர வாகன அறிமுகம் நிகழ்சியில் உரையாற்றிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இவற்றை ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கொள்கையின் கீழ் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முச்சக்கர வண்டிகள் விசேட பங்களிப்பை வழங்கும். அதனால், இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை வலுவூட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான முறையான வேலைத்திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் Kenichi Suganuma கலந்து கொண்டார்.

Related posts: