இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – தொற்று நோயியல் பிரிவு!

Monday, February 8th, 2021

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நேற்றையதினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

முன்பதாக கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: