இலங்கையில் அரசியல் பதற்றம் – பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு!

Saturday, October 27th, 2018

காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய சகல காவல்துறை  அதிகாரிகளின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர்.லதீப் உள்ளிட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷவை நேற்றிரவு சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: