இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்!

Saturday, December 16th, 2017

இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு அதிநவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு புதிய பாதுகாப்பு முறையின் கீழ் அச்சிடப்படவுள்ளது.

புதிய கடவுச்சீட்டிற்காக மைக்ரோ சிப் ஒன்றும் உள்ளடக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பியகமவில் அமைந்துள்ள தோமல்ஸ் டி லாரூ நிறுவனத்தில் அச்சிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பியகம சுதந்திர வர்த்தக மையத்தில் அமைந்துள்ள லாரூ நிறுவனத்தில் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தன மற்றும் பிரித்தானிய பிரதமர் ஜேம்ஸ் டோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்

Related posts: