இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, March 6th, 2019

தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

காற்றின் வேகம் குறைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு கடுமையான வெப்பநிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் பருவப் பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கும் வரையில் வெப்பத்துடன் கூடிய காலநிலை இடைக்கிடை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவு பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய எதிர்வு கூறியுள்ளார்.


அடுத்த வருடம் 4ஆம் திகதி முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் முழுமையாக அமுல்!
மின்சாரத்தை சிக்கமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!
25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!
உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய வர்த்தமானியை செயற்படுத்தும் காலம் ஒத்திவைப்பு
கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...