இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள்!

Wednesday, August 24th, 2016

கொழும்பு துறைமுகத்தின் ஜயபாலு முனையத்திற்கு வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள் வருகைத் தந்துள்ளன.

குறித்த கப்பல்கள் முறையே, ஆகஸ்ட் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MSC சுசானா (MSC Susanna), MSC ஜொஹான (MSC Joanna), கொண்டிகிளரிஸ் (Conticlaris) மற்றும் பிராவோ (Bravo) ஆகிய நான்கு கப்பல்களே ஜயபாலு முனையத்திற்கு வருகைத் தந்த கப்பல்களாகும்.இந்த கப்பல்கள் மூலமாக கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த கொள்கலன்களின் செயற்பாடு 6506 ஆகும்.

Related posts: