இலங்கையின் முன்னேற்றப்  பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி

Saturday, June 18th, 2016

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான  கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது.  இலங்கையின் முன்னேற்றப்  பாதையில் இந்தியா  இலங்கையுடன் என்றென்றும் கைகோர்த்து நிற்கும் எனத் தெரிவித்தார்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று (18-06-2016) சனிக்கிழமை காலை சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளிக்  காட்சி மூலம் இணைந்து கொண்டார்.

இதன் போது உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள  துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டது அல்ல. பொருளாதார வளர்ச்சியின் அடையாளம். இது நமது ஒருங்கிணைப்பிற்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. இலங்கை மக்களுடன் ஒன்றுகூடி விழா கொண்டாடுவதால் இன்றைய தினம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த தினம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர மற்றும் இராதாகிருஸ்ணன், இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நா டாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  என  பலரும் கலந்துகொண்டனர்.

Related posts: