இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி மரணம்!

Saturday, February 24th, 2018

ஐ. நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய உனா மக்கோலி காலமானார் என கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்த அவர், இலங்கையில் ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். உனா மக்கோலி இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோரி இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.

Related posts: