இலங்கையின் உள்நாட்டு சந்தையில் புதிய எரிபொருள் சந்தை ஆரம்பம் – சினோபெக் நிறுவனத்துடன் மே மாதம் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் சில்லறையாக எரிபொருள் விற்பனையில் ஈடுபவதற்காக ஒப்பந்தம் மே மாதம் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.

அங்கு ஒப்பந்தம் தொடர்பான அட்டவணைகள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான பிற விடயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் இது தொடர்பான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டு 45 நாட்களுக்குள்

நடவடிக்கைகளை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: