இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தாயார்!
Wednesday, August 23rd, 2017மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் பேட்டை என்பனவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சீனா தாயாராகவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ஜி ஷியெங் லியெங் தெரிவித்துள்ளார்.
தங்காளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவின் சங்ஹாய் மாகாணத்தைப் போன்று இலங்கையின் தென் மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் . இதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். சீனாவின் உதவியுடன் தென் மாகாணத்தில் உயர் தரத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Related posts:
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பி...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை - அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு - பெற்றுத்தர முயற்...
|
|