இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

Thursday, June 30th, 2022

இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்கள் தொடர்பில் அறியத்தருமிடத்து தமது பொருளாதாரக் கொள்கைகளின் போது அதற்கு முன்னுரிமை வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாடு, சம்பா, வெள்ளை அரிசி உள்ளிட்ட 25 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: