இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது – உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் தெரிவிப்பு!

Monday, February 7th, 2022

இலங்கைக்கு ஆதரவளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பகுதியில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில் – உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. நான் முக்கிய அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தேன், உற்பத்தித்  திறன் கொண்ட நாடுகளின் செயல்திறன் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.

கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார மன்றத் கூட்டத்திலும் பங்கேற்றேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைக்கு ஒத்துழைக்க கடமைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

373 கடற்படையினருக்குக் கொரோனா தொற்று: 14 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைவு - கடற்படை ஊடகப்பிரிவு!
இலக்கினை வெற்றி கொள்ள இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி - வெற்றியை அமை...
மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது - முன்னாள் மின்சாரத்துற...