இலங்கைக்கு அருகே வளிமண்டல தளம்பல் – பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 13th, 2024

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (13) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கடுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னலினால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: