இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!

Saturday, March 4th, 2017

சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்சிக்கு சீனாவும் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படுகின்றது.

இந்நிலையில், சீன குவாங்சோவில் கடந்த சர்வதேச பயணம் குறித்த கண்காட்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த 19 சுற்றுலா நிறுவனங்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sl-16

Related posts: